செப்டம்பர் 16, 2010

இயற்கையை வணங்குவோம் .

 இயற்கை  வளத்தை 
  போற்றிடுவோம் .
  உலகில்  இன்பம் 
  கண்டிடுவோம் . 
  காற்றில்  கலக்கும் 
  மாசினை  தான்
  கலந்தது  விடாமல் 
 காத்திடுவோம் . 
 விரும்பிய  மரங்கள் 
 வளர்த்திடுவோம் 
 வேண்டிய  மழையினை 
 பெற்றிடுவோம் 
 அணுவின்  அழிவை 
 தடுத்திடவே  
 இயற்கை  வளத்தை
 காத்திடுவோம் ....
 இன்பம்  நிறைந்த  
 வழ்விதுவே 
 இயற்கை  சார்ந்து 
 வாழ்வதுதான் .
 உயிரை  போற்றி 
 வளர்ப்பது  போல் 
 இயற்கை  வளங்களை 
 வளர்த்திடுவோம் .




   More than a Blog Aggregator

.நோவை ஓட்டுவோம்.

சித்தர்கள்   - நம் முன்னவர்கள் 
காட்டிய வழிதன்னில்  
சென்றிடவே  -தீதில்லை .....
ஈட்டிய  பெருஞ்செல்வம்  
அழித்திட   தேவையில்லை 
காட்டிய வழிதன்னில் 
கடுமையில்லை --அனால் 
கட்டுப்   பாடுண்டு .
வைகறை  துயில் எழுந்து ...
ஈற்று  உணவை (கழிவுகள் )
நீக்கிக்  கொண்டு 
தூய  நீர்பருகி 
எரியோம்பல் (ஆசனபயிற்சி )
செய்திடவே  உடல் 
அனைத்தும்  உறுதிபெறும் .
வளியை(காற்றை) நெறிப்படுத்தி
உள்  வாங்கி கொண்டல்தான் ...
உளவாட்றல்  உயர்வடையும் 
உள்ளத்தை  செழுமையாக்கி ...
ஓரம்ச  சிந்தையாலே(தியானம் )
நாளைத்தான்    செலவிட்டால் ...
அந்  ந்ளெல்லாம்  இனியநாள்.
கம்போ  , கேழ்வரகோ ,சோளமோ
கைகுத்தல்  அரிசியோ ...
பக்குவமாய்  உணவாக்கி 
கீரை ,காய்கள் , தூய்மை 
செய்த  பருப்புகள்  பழம்சேர்த்து 
இளியம்(இரசாயணம் )
நீக்கி  -மண்ணில்  
ஏனம்(பாத்திரம்) செய்தது 
மகிழ்வோடு  உண்டிடவே ...
நோய்  இன்றி  வாழ்ந்திடலாம் .
இடை  உணவாய் 
பழசாறும்  பாகுநீரும் (பானகமும் ) 
பருகிடலாம்        .
வாரத்திற்க் இருநாள்தான் வெந்நீரில் 
எள்  நெய்குளியல் ...
ஆண்டிற்க்   கிருநாள்தான் ....
கழிச்சல் செய்துகொள்க 
திங்களிர்க்  கிருநாள்தான் ...
இல்லற   உறவு ...
நூறாண்டு   வாழ்ந்திடவே ...
நல்லநெறி  இதுவாமே.




More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...