பிப்ரவரி 21, 2011

சுய இன்பம் சரியா தவறா?


சுய இன்பம் சரியா தவறா?
( MASTERBATION)

இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான கற்பிதங்களும் பெரிதும் இருப்பதாக அறியலாகிறது . பல்வேறு இளைஞ்சர்கள் சுய இன்பம் சரியா தவறா என கேட்கின்றனர் . இந்த எண்ணம் அவர்களுக்கு எங்ஙனம் தோற்றம் கொள்ளுகிறது எங்கோ தவறாக வழி நடத்தப்படுவதினால் தானே
நானே வீராதி வீரன் என்று கூறிக்கொள்ளும் வைத்திய சிகாமணிகள் கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லாமல் வெறுமனே ஏட்டு ,மனப்பாட
முறை கல்வியை கற்றுவிட்டு சுய இன்பம் தவறு இல்லை என போதிக்கிறனர் .அப்பாவிகளான இளையோர்கள் வழிதெரியாமல் நோயாளி யாகின்றனர் .

எது அறிவு அறிவியல்

எந்த ஒரு செயலையும் நுட்பமாக ஆய்வு நோக்கு இல்லாமல்குருட்டுத்தனமாக எதிர்க் கின்றவ்ர்களும் முண்டு ,ஏற்க் கின்றவர்களும் முண்டு.இந்த இரண்டும் பெரும் பிழையே. கண்மூடித்தனமாக போற்றுதல் அல்லது தூற்றுதல் நோயின் அறிகுறி என்பார்கள் அறிஞ்சர்கள். அது போல எந்த ஒன்றையும் அறிவியல் நோக்கில் ஆய்ந்து இந்த குமுகத்திற்கு அளிக்க வேண்டும் , முறையில்லாமல் இந்த குமுகத்தை முடமாக்க நினைக்க கூடாது .

இயற்க்கை வழங்கும் கொடை உயிரிகளின் மறு உற்பத்தி

இயற்கையின் படைப்பு தன் கால்வழியை (சந்ததியை ) பெருக்குவதுதானே இதை இயற்கையோடு இணைத்து வைத்தால்தான் முறையாக உயிரிகள் பெருக்கமடையும் என்றெண்ணிய இயற்க்கை அமைப்பே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. அனால் வலுக்கட்டாயமாக பாலுறுப்புகளை தூண்டிவிட்டு இன்பம் காணுவது இயற்க்கைக்கு முரணானதும் பிழையானதும் ஆகாத? என் இப்படி மஞ்சள் ஏடுகளைப்போல் மட்ட ரகமான கருத்துகளை இளையோரின் மீது திணிக்கபடுகிறது என்பது விளங்காமலில்லை. நோயாளியாக்கதனே ? அப்போது தானே பணப்பை நிரம்பி வழியும் .

உண்மையின் குரல் ஈன குரலா
இன்று உண்மையின் குரல் ஈன குரலாகவே எல்லோருக்கும் கேட்கிறது .
உண்மையை விற்ப்பது போராட்டமாக இருப்பதாக காண முடிகிறது . பெரும்பான்மை மக்கள் போலித்ததின் பின்னர் அணியமாகின்றனர் . இதன் பின்னர் கவர்ந்திழுக்கபடும் மக்கள் விட்டில் பூசிகளாக விழுந்து மடிகின்றனர் .

தன்னின்பத்தில் (சுய இன்பத்தில் ) எந்த கெடும் நிகழுவதில்லை அந்த செய்கையில் எந்த பிழையும் இல்லை . என்று பிழையாக போதிக்கப்படுகிறது . விந்துப் பொருள் என்பது ஈற்றுணவு (மலம் ) ,சிறுநீர்,எச்சில் போன்றது என தவறான வழிகாட்டுதல்செய்யப்படுகிறது கற்பிக்கப்படுகிறது
எச்சில் உமிழ,உமிழ வற்றிபாய் விடுமா என்ன? என்று கேட்கிறார்களாம் இது மேம்போக்காக பார்த்தல் பிழை இல்லாமல் படலாம். தொடர்ந்து வலுக்கட்டாயமாக எச்சிலை துப்பி கொண்டே இருந்து பார்க்கட்டும் எச்சில் வற்றி போய் மனிதனே நோயில் விழுந்து போவான். பாலுறுப்பு களையும் இப்படி வலுக்கட்டாயமாக தூண்டி விட்டு இன்பம் காணுவது மனிதனை நோயாளி யாக்குமே யன்றி வேறென்ன நிகழும்?

உளவியல் ரீதியில் ...

இப்படி சுய இன்பத்தில் ஈடுபடுகின்றவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கபடுவதென்னவோ உண்மை . குற்ற வுணர்வு தோன்றி தன்னம்பிக்கை இழந்து போவர்கள் இப்படி பல சிக்கல் களுக்கு ஆளாகின்றனர் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வர்கள் உடலில் சக்தி குறைந்து போவதாகவும் கண்கள் குழிவிழுந்து பல்வேறு நோய்களால் பாதிக்க படுவதாகவும் கூறு கின்றனர்.பாதிப்படைந்த வர்கள் .

மனிதனே விலங்குகளாகி

இப்போது பலரிடம் கதைக்கும் போது மனிதன் விலங்குகளாகி வருகிறான் என்கின்றனர் . எந்த விலங்கு தன்னை யொத்த விலங்கு களின் பாலியல் தொடர்பான படங்களை பார்த்து நேரத்தை செலவிடுகிறது? தெரியவில்லை அதேபோல மனிதனைத் தவிர எந்த விளங்கும் பாலியல் இன்பத்தில் முகிழ்த்து கிடைப்பதில்லை . பாலுறவு நேரம் முடிந்ததும் அதன் தேவை தீனியை தேட தொடங்கிவிடும் .
முறையில்லாத வகையில் பெறப்படும் அறிவினால் பாலியல் தெடர்பான சிந்தனையில் நேரத்தை செலவிட்டு உடலையும் சூடேற்றிகொண்டு உலவாற்றலையும் கெடுத்து கொள்ளு கின்றனர் .

முறை இல்லது அளவிறந்து விந்து இழப்பாகி பின்னர் முறையான திருமண வாழ்க்கையில் துன்பத்தை நுகருகிறனர் . இப்படி பட்டோரின் குழந்தைகளும் சக்தி குறைந்தவர்களாக இருக்கின்றனர் . என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆக இத்தகு செயலைசெய்கின்றவர் ஆண் , அல்லது பெண் யாராக இருந்தாலும் உடல் கெடும் என்பதில் எள் முனையளவும் ஐயம் வேண்டாம்

இந்த பழக்கமுள்ளவர்கள்

நாளும் எரியோம்பல் (யோகாசனம் ) செய்க.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
எள் நெய்குளியல் செய்க.
பாலியல் எண்ணம் கிளர்ந்தெழசெய்யும் எண்ணங்களை நீக்குக
தனிமையை தவிர்க்க செய்க.
செய்யும் தொழிலில் முழுமையான கவனம் செலுத்துக.
எந்த ஒன்றையும் பிழையானது என தெரிந்த பின்னர் அதை விலக்க
முயல்க..
வெற்றி உமதே
தமிழ கலைகளை காப்போம் தமிழன் வெற்றிகொள்ள துணைநிற்போம்.More than a Blog Aggregator

11 கருத்துகள்:

  1. என்ன சொல்றதுனே தெரியலை டாக்ட்டர் அய்யா...

    பதிவும் போட்டு விட்டிர்கள் தெரியாத்தனமா நானும் வந்து விட்டேன் கருத்து சொல்லா விட்டால் தூங்கும் போது கண்ணு தெரியாது.

    அதாவதுங்க ஆணாகிலும் அல்லது பெண்ணாகிலும் மணம் முடிப்பதற்கு முன்னே இச்சிற்றுன்பத்தை அடைவதற்கு முழுதும் முயற்சி எடுக்கா விட்டாலும் ஒரு சிறிதளவாவது முயற்சி செய்துருப்பார்கள் என்பது எனது கருத்து.

    இது சரியா அல்லது தவறா என்று நீங்கள் என்னிடம் கேட்டால் நான் சரி என்றுதான் சொல்லுவேன்.

    காரணம் இந்த ஆசை என்பது பருவ வயதிற்கு முன்பே வந்து விடுவதால் அடக்குவது கஷ்ட்டம் என்பது கட்டுரையை எழுதிய உங்களுக்கும் தெரியும் பின்னூட்டம் போடும் எனக்கும் தெரியும்,இதனால் விபச்சாரங்கள் குறைக்கப் படுமே தவிர கூடுவதற்கு வழியே இல்லை.

    அறிவியல் ரீதியாகவும் இச்செயலுக்கு தீங்கு இல்லை என்று பல டாக்ட்டர்களும் கூறி இருக்கின்றாகள், இதுதான் பொழப்பு என்று இருந்திடக் கூடாது அவ்வளவுதான்.

    நல்லக் கட்டுரை அய்யா...

    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  2. லேகியம் விக்க இப்படியும் ஒரு வழி போல! நீங்க சொல்றதைப் பாத்தா மனைவியுடன் கூட அடிக்கடி உறவு வச்சுக்க கூடாதுன்ற மாதிரி இருக்கு! சுயலாபத்துக்காக இப்படி இளைஞர்களைக் குழப்புவதை விட சுய இன்பம் தவறில்லை!

    பதிலளிநீக்கு
  3. யார நம்புறதுன்னே தெரியல.
    என்னை பொறுத்தவரையில் அத்தகைய ஆசை
    வரும்போது தீர்துகொல்வதுதான் நல்லது ....
    இல்லை என்றல் அத்தகைய ஆசை
    தவறான வழிக்கு விபசாரத்திற்கு
    அழைத்து செல்லும். என்னை பொறுத்தவரை
    சுயஇன்பம் ஒன்றும் தீயது இல்லை.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துகளுக்கும் பாராட்டுகள் நன்றி .நம் உழைப்பு எந்தவகையிலும் வீணடிக்க கூடாது எந்த சக்தி இழப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம் . இன்றைய சூழலில் மனிதன் தன் உடல் சக்தியை மட்டுமல்லாமல் உழைப்பு சக்தியையும் வீணடிக்க கூடாது என்பது எமது விழைவு. குறிப்பாக இந்த விவாதத்தை வேணும் என்றே ஒருவகையில் தொடங்கினேன் என்றும் சொல்லலாம் . இளகம்விற்பதற்கு நம் உலகெங்கும் விற்பனை உரிமை பெற்று இருக்க வில்லை . நம் இந்த இடுகை எழுதியதும் எல்லோரும் எம்மிடம் தன் இளகம் (லேகியம் ) வங்க வருவார்கள் என்றும் எண்ணி எழுத வில்லை இந்த குமுகம் தன் உழைப்பு சத்தியை வீணடிக்க கூடாது என்பதே.முறையான உழைப்பை முறையாக செலவிட்டு இந்த புடவி எங்கும் பொன் விளையும் நிலமாக மாற்றி எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே அருள் கூர்ந்து இந்த கோணத்தில் சிந்திப்பீர்களாக.

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவை அருள் கூர்ந்து முழுமையாக படித்தால் எல்லா விடயமும் நன்கு விளங்கும் நம் அச்சுறுத்தி சில்லறை சேர்க்க வழிவகை செய்ய வில்லை தன் (சுய )இன்பம் தவறான செய்கை திடமான எதிர்கால குமுகத்தை உண்டாக்க வேண்டும் என்பதே எமது விழைவு .

    பதிலளிநீக்கு
  6. சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி?யில் தெளிவாக இது தவறில்லை என சொல்லி விட்டாரே..

    பதிலளிநீக்கு
  7. எஸ். பிரபாகர்12:19 PM, ஆகஸ்ட் 01, 2011

    தற்செயலாக இக்கட்டுரையை படிக்க நேர்ந்தது. கட்டுரை முழுமையாக இல்லை.
    இக்காலத்தில் வேலை இல்லா திண்டாட்டம், வாழ்க்கைப் போராட்டங்கள் போன்ற காரணங்களால் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே 30 வயதுக்கு மேல் என்று ஆகிப்போனது.
    12 வயதிலேயே பாலுணர்வு தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.
    12 வயதிலிருந்து முப்பது வயது வரை உடலுறவு இல்லாமல், வேறு தவறான பழக்கங்களுக்குப் போய்விடாமல் இருக்க சுயஇனபம் ஒரு வடிகாலாக இருக்கிறது என்பது தான் யதார்த்தம். எனவே அதை அறவே கூடாது என்று சொல்வதை விட அளவாக வைத்துக் கொள்வது நல்லது என்று புத்திமதி கூறுவதே சரியானதாய் இருக்கும். வாரம் இரண்ட முறை என்பது ஆபத்தானதல்ல என்று கூறலாமா?. சிலர் இரு நாளைக்கு ஒரு முறை அல்லது இன்னும் அதிகமாகச் செய்கிறார்கள். அது சிறிது அதிகம் அதனால் தவிர்க்கப்படவேண்டும் என்று கூறலாமா?.
    இம்மாதிரிப் பழக்கத்தில் அதிகம் ஈடுபட்டு சக்தி வீணாகிவிட்டதோ என்று பயப்படுபவர்கள் நெல்லிக்காய், அஸ்வகந்தா லேகியம், ஆலிவ் எண்ணெய், முருங்கைக்காய், கண்டங்கத்திரி பொடி, போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது வீணாகிப் போன சக்தியை கொஞ்சம் சமப்படுத்த உதவும் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா1:53 PM, ஜனவரி 16, 2013

    hello sir mastrobation are wrong u asked any evidence are available in u.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா11:00 PM, ஆகஸ்ட் 04, 2013

    very very thanks to you ayya.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான கட்டுரை ஐயா... இளம் வயதினருக்கு சத்தி இழப்பது என்பது ஜஸ்ட் ஆசை அடக்கும் முறை என்று நினைத்து இருந்தேன். அது தவறு என்று இப்போது புரிந்து கொண்டேன், உங்கள் கூற்று படி இனி வாழ தொடங்குகிறேன்.... நன்றி...........

    பதிலளிநீக்கு
  11. உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை என்றால் சுய இன்பம் செய்வதில் எந்த ஒரு தப்பும் இல்லை

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...