ஜூன் 27, 2011

மாட்டின் பால் மனிதனுக்கு ஏற்றதா?




விலங்கு களில் இருந்து பெறப்படும் பால் மனிதனுக்கு ஏற்றதா ? இது என்ன
கேள்வி இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தி பால்
எல்லோருக்குமான உணவு என பட்டியல் இடுகிறதே ? இந்த வில்லங்கம் பிடித்த
சித்தமருத்துவர்களே இப்படித்தான் ஏதாவது சொல்லி மக்களை குழப்புவதே அவர்களின்
வேலை என முனுமுனுப்பது நமக்கு கேட்கிறது.

வேண்டாம் விபரீதம்

வேண்டாம் விபரீதம் என நினைப்பவர்கள் தொடரவேண்டாம்,இதோடு நிறுத்திவிடுங்கள்
படிப்பதை . இல்லை படித்தேதான் தீருவேன் என நீங்கள் முடிவு எடுத்தால் , முதலில்
இதயத்தை திடப்படுத்திகொள்ளுங்கள்.
மாட்டுப்பால்,மனிதனின் தமனியில் கால்சியத்தை அதிக அளவில்
படியச்செய்கிறது . அதேசமயம் மனிதனுக்கு விரைவில் முதுமைத்தன்மையை
உண்டாக்குகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.மாட்டுபாலை அருந்துவதால்
மாடுகளுக்குவரும் பல்வேறு நோய்கள் மனிதனை தாக்குகிறது என்பது உண்மையே.

மனிதனின் ஆயுள் 300 ஆண்டுகள்

மனிதனின் ஆயுட்காலம் 300 ஆண்டுகள் என ஒருபதிவில் எழுதியிருந்தேன்
, இந்த ஆண்டுகளில் மனிதன் 20 ஆண்டுகளை தன்னுடைய முழுமையான வளர்ச்சிக்கு
எடுத்துகொள்ளுகிறான் . மனிதனின் உடல் முழுமையடைய இருப்பது ஆண்டுகள் ஆகிறது
.ஆனால் விலங்குகள் அங்கனம் இருக்கவில்லை ,பிறந்த சில மணி நேரங்களில் தனது
நடவடிக்கைகளை தொடங்கி விடுகிறது அதாவது நடக்கவும் தாய்ப்பாலை அருந்தவும்
பழகி விடுகிறது. இந்த அதிவிரைவான விலங்குகளின் வளர்ச்சி இருபதாவது
அகவையில் தன் வாழ்நாளை நிறைவு செய்துவிடுகிறது. இப்படிப்பட்ட விலங்கு
களின் பாலை அருந்தி விரைவில் மனிதன் முதிர்ச்சியை தேடிக்கொள்வானேன்.

இதளியமே (இரசயனமே ) இன்றைய மாட்டின் பால்

முன்பு மாடுகள் புல்தின்று பால் கறந்ததது. இன்று இரசாயணம் கலந்த
தீவனங்களை தின்று பால் கறக்கிறது. இவைமட்டும் இல்லாமல் பால் குளிரூட்டும்
நிலையங்களில் சேர்க்கப்படும் கலப்புகள் எண்ணிலடங்கா. பாலை இப்படியே
அருந்தினால் கூட பரவாயில்லை . ஆனால் இன்றைய வெள்ளை சர்க்கரை சேர்த்து பால் அருந்துவதால்
நோய் பலமடங்கு அதிகமாகிறது. இந்த வெள்ளை சர்க்கரை அதன் தயாரிப்பு
முறையே மனிதனை நோயாளி ஆக்குகிறது. வெள்ளை சர்க்கரையை தூய்மையாக்க
(Bleaching ) செய்ய பயன்படுத்தும் இரசாயணம் மனித உடலுக்கு ஏற்றதல்ல
என்பதுதான் . அதுமட்டும் இல்லாமல் இந்த வெள்ளை சர்க்கரை உடலில் உள்ள
வைட்டமின்களை அழிக்கிறது அதாவது சர்க்கரை வைட்டமின்களின் திருடன் .(White
sugar is a vitamin thief ) என்கிறார்கள்.

கருப்பே சிறப்பு

தமிழ் மருத்துவம் எப்போதும் கருப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் .
கருநொச்சி, கருந்துளசி இப்படி...இந்த வகையில் கருப்பட்டி வெல்லம்
போன்றவையும் சிறப்பானவைகள் . அதேபோல வெண்மை நிறத்தை சித்தமருத்துவம் வெள்ளை
விசம் என்கிறது அதாவது சர்க்கரை , உப்பு ,மட்டைதீட்டபட்ட அரிசி இவைகள்
வெள்ளை விசங்கள் .

விலங்கா மனிதனா

இன்று விலங்குகளே உயர்வானவை. பிறந்த விலங்கு சில ஆண்டுகளில் தாய் பாலை
மறந்துவிட்டு இயற்கை உணவிர்விற்கு திரும்பிவிடுகிறது. அவைகள் பாலை தேடி
அலைந்து கொண்டிருப்பதில்லை மனிதன்தான் மரித்துபோகும் வரை பாலைத் தேடுகிறான்
எந்த விளங்கும் தன்னினத்தை கொள்ளுவதில்லை ஆனால் மனிதன்தான் சக மனிதனையே
கொல்லுகிறான். அதற்க்கு துணையும் போகிறான் .நாம் காடையன் இராஜபக்சே வையும் . இங்குள்ள மேனன்களையும் சோனியாவையும் கூறுகிறேன் என நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்யட்டும்.?

பாலா விசமா ?

இயற்கையான காய்கள் கனிகள் போன்ற வற்றை கொடுத்து குணமாகி வரும்
நோயாளிகளுக்கு முறையே மாட்டின் பாலையும் மோரையும் வழங்கியதில் தடுமன் (சளி
) உண்டானதாகவும் அடிபட்டவருக்கு சீழ் பிடித்ததாகவும் மற்ற நோயாளிகளுக்கு
நோய் தீவிரம் அடைந்ததாகவும் கண்டறியப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கிறது. பால்
பொருட்களை உண்பவர்களுக்கு சளி தோன்றுவதை தவிர்க்க முடியாது. சளி நிறைந்த உடலை
தேடி நோய்கள் குடிகொள்ளத்தொடங்கும். நுரையீரலில் சளி நிறைந்தால் மிகையாக
உயிர்வளி (ஆக்சிஜன் )கிடைக்காமல் போகும் உயிர்வளி கிடைக்காவிட்டால் மனிதன்
நோயாளி ஆவான்தனே ?

பாலுக்கு மாற்று என்ன ?

அப்படியானால் பாலுக்கு இணையான உணவு என்ன என்பது உங்கள் வினா .
இயற்கையான முறையில் காய்த்த பழுத்த விளைந்த பழம்தான் முழுமை நிறைந்த
உணவாகும் . பால்தான் வேண்டும் என அடம் பிடித்தல் எமது முந்தய இயற்கை உணவுகள்
குறித்த இடுகையில் இயற்கை பால் தயாரிக்கும் முறை உள்ளது . அதன் மூலம்
தேங்காய், நிலக்கடலை, எள் , நெல். பாதம், போன்றவற்றில் இருந்து முறையான சத்து
நிறைந்த இயற்கை பால் தயாரித்து பயன் படுத்தி நீடு வாழலாம்.

*சித்த மருத்துவம் காப்போம் நோய்வென்று நீடுவாழ்வோம்.*More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...