ஆகஸ்ட் 07, 2011

கணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )




இன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் வந்து விடுகிறதே என கவலைப்படுகிறவர்கள் மிகுதியாக இருக்கிறனர் அதில் கண்களுக்கு உண்டாகும் சிக்கலும் மிகையாக இருக்கிறது என்பது உண்மை .

உடலோம்பளும் கண் பாதுகாப்பும்

முன்பே கண் பற்றிய தனியான இடுகையில் பல செய்திகளை குறிப்பிட்டு இருந்தேன் . இருப்பினும் இதில் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறேன் . தேவையை ஒட்டியே இந்த செய்தி. மனித உடல் பெரும்பாலும் விரைவில் கெடுவதில்லை . இயன்றவரை தன்னை முழுமையாக அர்பணித்து கொள்ளவே விரும்புகிறது நமது உடலுறுப்புகள் . இருப்பினும் தொடர்ந்து நாம் அவற்றிற்கு முறையான பயிற்ச்சி வழங்காமையால் மனிதனுக்கு கேடுகள் உண்டாகிறது இந்த கேட்டில் இருந்து மனிதன் தப்பித்து கொள்ள விரும்பின் எல்லா பிணிகளில் இருந்தும் தன்னை பாது காத்துக் கொள்ளலாம். எனவேதான்
முறையான வழிமுறைக்கு வருவதை பற்றி சிந்திப்போம் .

இன்றைய முறையல்லாத உணவு பழக்கம் முறை இல்லாத வாழ்க்கைமுறை போன்றவற்றின் காரணமாக கண் தொடர்பான பிணி தோற்றம் கொள்ளுகிறது .தாய் கருவுற்றிருக்கும் போது புளி /புளிப்பு சேர்ந்த உணவுகள் மிகையாக எடுக்கும் போது குழந்தையின் . கண் பார்வையை அது பாதிப்பதாக சொல்லப்படுகிறது . இதுமாதிரி உணவுகளை நீக்கி விடலாம் அல்லவா?

பார்வை குறைபாடு நோயா

மனித உடல் நோய்க்கு காரணமாக வாழ்க்கைமுறை சூழலும் ஒரு காரணம் என குறிப்பிட்டு இருந்தோம் . இரவில் மிகையாக கண் விழித்தல் மயக்கப் பொருட்களான மது ,புகை மிகையாக எடுத்தல் உப்பு உணவில் மிகையாக எடுத்தல் எல்லா நேரங்களிளுக் மிகையாக கவலையுடன் இருத்தால் போன்ற காரணங்களும் நோய்க்கு காரணமாக இருக்கிறது.

இவை எல்லா வற்றையும் விட சத்து பற்றாக்குறை பற்றி நம் மக்கள் கவலை கொள்ளுவதே இல்லை . பெரும்பாலும் நோய்களுக்கு சத்து பற்றாக்குறையும் ஒரு மூகாமையான காரணமாக இருக்கிறது . எல்லா உடல் உறுப்புகளுக்கும் தனியான சத்து தேவையிருக்கிறது இந்த தேவையை அறிந்து இட்டு நிரப்பாமையினால் நோய் நம்மோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

கண் பாதுகாப்புகள்

எந்த ஒரு பொருளையும் மிகையாக பயன் படுத்தும் போது அது கேடு அடையும் தானே? கண்களை கடினமாக வேலை வாங்கினால் விரைந்து அது ஓய்வு எடுத்து கொள்ளுகிறது . கடினமாக வேலை வாங்கும் போது அதை முறையாக பழக்கினால் அதனால் வரும் கேடுகளை நீக்கி கொள்ள லாம்

கண்ணிற்கும் கணினிக்குமான இடைவெளியை முறைபடுத்துக .
கண்ணிற்கு தொடர்ந்து களைப்பு தரும் வேலையை குறைத்து கொள்க .
சிவப்பு வண்ணங்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்கவும்.
கண்களுக்கு நாளும் முறையான பயிற்ச்சி தருக அதாவது அதிகாலையில் வயிற்றை தூய்மை செய்து கொண்டபின் நேரே நின்று இடம் ,வலமாக முறையே கழுத்தை திருப்பும் ஆசன பயிற்ச்சி செய்க . பின்னர் நேரே நின்று மூஞ்சியை திருப்பாமலே கண்களை மட்டும் எல்லா பக்கங்களையும் பார்க்கும் படி சுழற்றுக . தலை அசைய கூடாது கண்களை மட்டுமே சுற்ற வேண்டும் .முறையே மூன்று ,மூன்று முறை மாற்றி மாற்றி செய்க .
உணவில் முருங்கை கீரை , சிறுகீரை, குறிப்பாக கண்களை பலப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரையை நாளும் உணவில் பயன்படுத்துக .கேரட் முறைப்படி பயன்படுத்துக.
தலைக்கு நாளும் திரிபலா என அழைக்கப்படும் நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய் சேர்ந்த எண்ணெய் தலைக்கு தடவி குளிக்க செய்க.
பகல் உணவிற்கு பின் பத்து நிமிடம் கருப்பு துணி கட்டி ஓய்வு எடுக்கவும் தூங்க கூடாது தூங்கினால் தீங்கில்லை பகலுறக்கம் கூடாது என்பது சித்தமருத்துவ விதி .
இவற்றை முறைப்படி பழக கண் இரவிலும் உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கும் .
நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...