ஜனவரி 23, 2012

எண்ணைக் குளியல் (oil bath )

            மாறிவரும்  இன்றைய  சூழலில்  பழமையும்  பாரம்பரியமும் மறந்து  வருகிறது . நாற்றமெடுக்கும்  போலித்தனமும்  மேலை  நாகரீகமும்  கடைபிடிக்கப்  பட்டுவருகிறது . இதனால்  நோய்கள்  பெருகுகிறது .பழமையான  நமது  மருத்துவமுறை  சிறந்த  வாழ்வியலை  தன்னகத்தே  கொண்டது . அந்த வகையில்  எண்ணெய் குளியல்  இன்றைய  விரைவு  சூழலில் மறந்து  போன  ஒன்றாகி  விட்டது.  வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்வது சிறந்த முறையாகும் .

        வேறெந்த  மருத்துவ முறைகளிலும்  இல்லாத சிறப்பு  நமது சித்த மருத்துவத்திற்கு  உள்ளது. அதுதான் மனித வாழ்வியலோடு  இணைந்த  மருத்துவமுறை. வாரம்  இருநாள்  எண்ணெய் குளியல்  செய்க.காரம், புளி குறைத்து  உண்ணுக என  கட்டளையிட்டு  மனிதனை  வழி  நடத்தும் .

        எண்ணைக்  குளியல்  காலை 6 .30  க்குள் தொடங்கிவிட  வேண்டும் .இள வென்நீரில்தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . சீயக்காய்  அல்லது நலுங்குமா  பயன் படுத்தலாம் . எளிமையான  உணவுகள் உண்ணவேண்டும்.  எண்ணைக்  குளியல் செய்த அன்று  பாலுறவு  கூடாது . பகலுறக்கம் கூடாது .கடுமையான  வெய்யலில்  வேலை  செய்யகூடாது  .குளிர்ந்த உணவுகள்  கண்டிப்பாக கூடாது .

எண்ணைக்குளியல்  செய்வதால் பலன்கள் . 

உடற்சூடு  சீராகும் .
அழகுகூடும்.
சருமம்  மென்மைபெரும்.
ஐம்புலனும் நல்ல பலன் கிடைக்கும் .
தலைமயிர்  நன்கு  வளரும் .
நல்ல குரல் வளம்  கிடைக்கும் .
 எலும்புகள்  பலப்படும் . 

 இப்படி  பல பலன்கள்  இதனுள்  பொதிந்து  கிடக்கிறது.  எனவே  முறைப்படி  எண்ணக் குளியல்  செய்வோம் .

சித்தமருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம்.
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...