அக்டோபர் 29, 2012

கர்ப்ப மூலிகை வரிசை கரிசாலை ....



    கர்ப்ப  மூலிகைகளைப்பற்றி எழுத்தத்  தொடங்கினேன்  பின்னர் சில வினாக்கள்  அவற்றான்  தொடர்ந்து  எழுத முடியாமல் போனது .இந்த இடுகைக்கு கர்ப்ப மூலிகை  கரிசாலை  ஆற்றி பார்க்கலாம்  இந்த மூலிகை  உண்மையில்  உடலை பொன்னாக்கும் உயர்ந்த மூலிகையாகும்  இதன் பலனை  கண்டவர்களே  அறிந்து கொள்ள இயலும்  இந்த கரிசாலை  மூலிகையை  பலவகையில் அழைக்கின்றனர் . கரிசனாங்கண்ணி ,கரிப்பான் , கரிசாலை ,கைகேசி ,பிருங்கராஜம்  என பல பெயர்களில் அழைக்கின்றனர் .

      இதன்  இலை , வேர் , மற்றும்  எல்லா  பகுதிகலும்  மருந்தாக  பயன்படுகிறது . இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த  வள்ளார்  இதன் பயனை மிகும் சிறப்பாக  பதிவு செய்வர்  நாம் ஒரு கைப்பிடி அளவு  வெறும் வயிற்றில் பச்சையாக  மென்று தின்ன வேண்டும்  என்பர்  இதனின் சிறப்ப்புகள்  அளவிட இயலாதவைகள் .

இது  கசப்பு  சுவையுடையது .

பித்தநீர்  பெருக்குதல் 

உடலை  தேற்றி  பெருக்குதல்
உடலை உரமாக்குதல்
வாந்தியுண்டக்குதல்
நீர்மலம் போக்குதல்
இரத்தத்தைப்  பெருக்குதல்
ஈரலைத் தேற்றுதல்
வீக்கத்தைக்  கரைத்தல்
குட்டம்
காமாலை
பாண்டு
பல்நோய்கள்
சுரம்

போன்ற  நோய்களை  நீக்குவதேடு  இது கல்ப  வகை மூலிகை  ஆதலால்  முறைப்படி உண்டுவர   உடல்  பொன்னிறமாகி உறுதியுடன்  விளங்க  வைக்கும்  . நோய்களை விரட்டும்  தலை மயிர் கருக்கும் கண்கள்  இரவிலும்  ஒளிரும்    இவ்வளவு  சிறப்பு வாய்ந்த  மூலிகையாகும்

குரற்கம்மர்    காமாலை  குட்டமோடு  சோபை
யுரர்பாண்டு  பன்னோ யொழிய  நிரர்சொன்ன
மேய்ந்த கரையோத்த மீளியன்னு  நர்புலத்து
கையாந்த  கரையொத்த  கால்
 என்கிறது மருத்துவ பாடல்   முறைப்படி    உண்ண  விழைவோர் காலையில்  வெறும் வயிற்றில்   ஒரு கைப்பிடி அளவு  மூலிகையை  உண்டுவர  எதிர்பார்த்த  சிறந்த  பலனைத்தரும்

சித்த மருத்துவம்  காப்போம் நோய் வெல்வோம் 

  

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...